தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, பாதி வழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்தைப் பயணிகளே இறங்கித் தள்ளிய அவலநிலை அரங்கேறியது.
வீரகேரளம்புதூரில் இருந்து தென்காசி நோக்கி நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. கல்லூரணி அருகே பயணித்தபோது பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றது.
இதையடுத்து அதில் பயணித்த பயணிகளே இறங்கி பேருந்தைத் தள்ளிய அவலநிலை ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.