தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின்போது கோமதி அம்மன் சப்பரம் பின்னால் வந்த தேவார பக்தர்களை, போலீசார் அனுமதிக்காததால் போராட்டம் நடைபெற்றது.
ஆடித்தபசு திருவிழாவையொட்டி கோமதி அம்பாள், கோயிலில் இருந்து தவக்கோலத்தில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, ரத வீதி உலாவாக தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்திற்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது தங்கச் சப்பரத்தின் பின்னால் தேவாரம் பாடியபடி பக்தர்கள் குழுவினர் வந்து கொண்டிருந்தனர்.
சப்பரம் தவசு பந்தல் பகுதிக்குச் சென்றபோது தேவாரம் பாடிச் சென்றவர்களை போலீசார் தடுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரை கண்டித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.