மதுரை வாடிப்பட்டி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் நெல் மணிகளைச் சாலையிலேயே குவித்து வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தனுச்சியம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இங்குள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் நெல் மணிகளைச் சாலையிலேயே குவித்து வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், வியாபாரிகளின் நெல்லுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.