சென்னை அம்பத்தூரில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.
மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில் சமையலறையில் இருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பின்னர் வெடித்துச் சிதறியது.
இதில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்புத்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து முழுவதுமாக அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து நேரில் சென்ற அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.