ராஜஸ்தானில் ஜுன்ஜுனு மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட நாய்களைச் சுட்டுக்கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜுன்ஜுனு மாவட்டத்தின் குமாவாஸ் கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஷியோசந்த் பவாரியா என்ற நபர் துப்பாக்கியால் 25க்கும் மேற்பட்ட நாய்களைச் சுட்டுக் கொன்ற வீடியோ வைரலாகி உள்ளது.
இச்சம்பவம் குறித்து ஷியோசந்த் பவாரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் போலீசார், இதுவரை கைது செய்யவில்லை என்று விலங்கு நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.