தேசிய கல்வி கொள்கையின் காப்பிதான் தமிழக கல்விக் கொள்கை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ராஜகோபுரத்தில் இருந்து கலசம் விழுந்த சம்பவத்தில் அரசு முறையாக பராமரிப்பு பணி செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
கலசம் விழுந்தது போல் திமுக அரசும் விரைவில் விழும் என்பதற்கு அறிகுறிதான் இது என்றும் அவர் கூறினார். பேசிய அவர், திமுக கூட்டணி கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளுமே ஜால்ரா அடிக்கின்ற கட்சிகளாகவே உள்ளன என்றும் நயினார் குறிப்பிட்டார்.
பீகார் மாநிலத்தில் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் 21 லட்சம் வாக்காளர்கள் இறந்தவர்கள் என்றும், மீதமுள்ளவர்கள் அங்கு இல்லாததால் நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதெல்லாம் அமைச்சர் துரைமுருகனுக்கு தெரியாமல் இதைப்பற்றி அவர் பேசி வருவதாகவும் அவர் கூறினார்.கிறார்.
தமிழகத்தில் வட மாநில வாக்காளர்கள் அதிகரிக்க காரணம் திமுகவினர் தான், அவர்கள் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் சாடினார்.