அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கை இந்திய ஆட்டோமொபைல் துறையை பாதிக்காது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்திய ஆட்டோமொபைல் துறை, உலக சந்தையை பூர்த்தி செய்யும் அளவுக்கு வலுவாக உள்ளதாக கூறினார். அதேபோல் இந்திய ஆட்டோமொபைல் சந்தை ஒன்று அல்லது இரண்டு நாடுகளை மட்டும் சார்ந்தது இல்லை என்றும், ஏற்றுமதியில் உலகில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
வர்த்தகத்தில் ஜப்பான் போன்ற பெரிய சக்தி மையத்தை இந்தியா முறியடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், 22 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்திய சந்தை 4.4 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் மாற்று எரிபொருள் தொழில் நுட்பங்களில் இந்தியா விரைவாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட நிதின் கட்கரி வழக்கமான எரிபொருட்களை சார்ந்திருப்பதை குறைத்து வருவதாகவும் தெரிவித்தார்.