சென்னை திருவொற்றியூரில் பட்டினத்தார் குருபூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோயிலில் அவர் பிறந்த ஆடி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி நேற்று இசை கச்சேரி, சொற்பொழிவு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் கரும்பு மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் கைலாய வாத்தியங்கள் முழங்க வடிவுடையம்மன் கோயிலின் 4 மாட வீதிகளிலும் பட்டினத்தார் வலம் வந்தார்.
பின்னர் அவர் ஜீவ சமாதியான கோயிலில் நடைபெற்ற குரு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
இதையடுத்து டிரம்ஸ் சிவமணி மற்றும் வேல்முருகனின் பக்தி பாடல் இசை கச்சேரி நடைபெற்றது. அப்போது குருபூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பத்மஸ்ரீ சிவமணி மற்றும் பாடகர் வேல்முருகன் ஆகியோரை பாராட்டினார்.
ன்னர் பேசிய வேல்முருகன், பட்டினத்தார் பாடிய பாடல்களை விரைவில் ஆல்பமாக வெளியிடப் போவதாக தெரிவித்தார்.