கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை, நியாய விலைக் கடையை சேதப்படுத்தியது.
கருமலை எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டு யானை ஒன்று, அங்கிருந்த நியாய விலைக் கடையின் மேற்கூரையை உடைத்து, ரேஷன் அரிசியை கீழே தள்ளி சேதப்படுத்தியது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர்.