புதுச்சேரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று பூணூல் அணிந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி புதுச்சேரி ஐயங்குட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாக பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில தலைவர் ரவிகுமார், வட தமிழக கோயில்களின் இணை அமைப்பாளர் இளங்கோ, மாநில செயலாளர் நந்தகுமார் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
மரபு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு சமூக தலைவர்கள் உட்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பூணூல் அணிந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நியமன சட்டமன்ற உறுப்பினர் தீபாஞ்சான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.