தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மதுப் பழக்கத்தைத் தூண்டும் விதமாக ரவுடி வரிச்சியூர் செல்வம் வீடியோ பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேக்கரை கிராமத்தில் உள்ள விவசாய தோப்பில், ரவுடி வரிச்சியூர் செல்வம், மதுபாட்டில்களை தன் முன்பாக அடுக்கி வைத்து, மதுப் பழக்கத்தைத் தூண்டும் விதமாகப் பேசி வீடியோ வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.