திருவள்ளூர் அருகே மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
எளாவூர் ரயில் நிலையம் அருகே இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகிறது.
இங்கு மது அருந்தவருபவர்கள் பெண்கள் பல்வேறு சிரமங்களைத் தினம்தோறும் சந்தித்து வருகின்றனர். எனவே, மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.