கனடா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் கரேன் கச்சனோவை வீழ்த்தி பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.
கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற இப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த பென் ஷெல்டன் , ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.
போட்டியின் முதல் செட்டை 7-6 என்ற புள்ளிக்கணக்கில் கரேன் கச்சனோவ் கைப்பற்றினார். அடுத்த இரு செட்களில் ஆதிக்கம் செலுத்திய பென் ஷெல்டன் 6-4, 7-6 என்ற புள்ளிக்கணக்கில் கரேன் கச்சனோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.