மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் தவெக சார்பில் மாநாடு நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தவெக சார்பில் 2வது மாநாடு மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில் நடத்தப்பட உள்ளது.
வரும் 21ம் தேதி பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ள இந்த மாநாட்டின் முன்னேற்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு பங்கேற்பாளர்களுக்கு எளிதில் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட உள்ளது.