ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா - சரியும் பொருளாதாரம்!
Oct 28, 2026, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 12:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவின் தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்கான ஒரு வழியாக உலக நாடுகள் மீது ட்ரம்ப் நடத்தும் வர்த்தகப் போரில் ட்ரம்ப் வெற்றி பெற்றாரா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலையே அமெரிக்கப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ட்ரம்பின் பொருளாதார கொள்கைக்குக்  குறைக்கப்பட்ட வரிவிதிப்பு, வர்த்தக பற்றாக்குறையைச்  சமநிலைப்படுத்துதல், கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் வரி கட்டணங்கள் ஆகியவை நான்கு முக்கிய தூண்களாக உள்ளன. மீண்டும் அதிபரானதிலிருந்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆக்ரோஷமான முறையில் வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார். குறிப்பாக, ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ள நாடுகள் மீது அதிகமான வரிகளைக் கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்கா மக்கள் மீண்டும் பணக்காரர்களாக்குவதற்காக இந்த வரி விதிப்பு என்று ட்ரம்ப் சொன்னாலும், உண்மையில்  அமெரிக்கப் பொருளாதார இயக்கவியல் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதிலிருந்து பெறும் வருமானம்,  அமெரிக்கப் பொருட்களை இறக்குமதி செய்வதை விட அதிகமாக இருப்பது  ட்ரம்பின் கண்களை உறுத்துகிறது.

இந்தியா, சீனா போன்ற நாடுகளின் இந்த வர்த்தக பற்றாக்குறை  அந்த நாடுகளுக்குச் சாதகமாக இருப்பதால் அதைச் சரிக்கட்ட  வரி விதிப்பை ஒரு முரட்டு ஆயுதமாக ட்ரம்ப் பயன்படுத்துகிறார்.

நீதிமன்றங்கள் தனது வரி கொள்கையை  ரத்து செய்யக்கூடிய அபாயத்தையும் அறிந்துள்ள ட்ரம்ப், முன்னதாகவே, “அமெரிக்காவின் மகத்துவத்தைத் தடுக்கக்கூடிய ஒரே விஷயம், நம் நாடு தோல்வியடைவதைக் காண விரும்பும் ஒரு தீவிர இடமாக நீதிமன்றம் இருக்கும்!” என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதுவரை, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், பிரிட்டன், தென் கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. அந்த நாடுகளின் பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கப் பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 90 நாட்களில் 90 ஒப்பந்தங்கள் என்ற வெள்ளை மாளிகையின் அறிவிப்பு பொய்யாகி இருக்கிறது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த ட்ரம்ப்,பிரேசிலுக்கும் 50 சதவீத வரி விதித்துள்ளார்.

காலனித்துவ கொள்கையை குளோபல் சவுத் நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் அரசு பின்பற்றுவதாகவும், அதன் மூலம் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கிறது என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. வளர்ந்து வரும் உலக ஒழுங்கில் தனது ஆதிக்கம் குறைந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத அமெரிக்கா, சர்வதேச அளவில் தனித்தன்மையைப் பின்பற்றும் நாடுகள் மீது அரசியல் காரணத்திற்காகப் பொருளாதார நெருக்கடியைக் கொடுக்கிறது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆனாலும், அமெரிக்க இறக்குமதிகள் மீதான ட்ரம்பின் வரி விதிப்பு, பொருட்களின் விலை உயர்வுக்கும், நாட்டின் வளர்ச்சி குறைவதற்கும் வழிவகுக்கும் என்பதைப் பொருளாதார வல்லுநர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ட்ரம்ப் உருவாக்கியுள்ள நிச்சயமற்ற பொருளாதாரத்துக்கான விலையை அமெரிக்கர்கள் ஏற்கனவே செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

Tags: dollorIndiausa news todayTrump's trade war: America left alone - economy collapsing!Donald Trump news today
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை : தவெகவின் 2-வது மாநாட்டு பணிகள் மும்முரம்!

Next Post

சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி சீரமைக்கப்படாததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் : விவசாயிகள் வேதனை!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

Load More

அண்மைச் செய்திகள்

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies