உத்தரகாசியில் உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு பெண் ஒருவர் தனது துப்பட்டாவைக் கிழித்து ராக்கி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம் உருவாகி நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் சேதமடைந்த ஹர்சில் பகுதியில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
மீட்புப் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்ட போது பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெண் ஒருவர் தனது துப்பட்டாவைக் கிழித்து, அவருக்கு ராக்கி கயிறாகக் கட்டினார். இது அங்கிருந்திருந்தவர்களை நெகிழச் செய்தது.