கேரளாவில் ரஜினியின் கூலி படத்திற்கு முன்பதிவு டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் முண்டியடித்துச் சென்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் கூலி படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவும் நிலையில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள திரையரங்கில் கூலி படத்திற்கான டிக்கெட்டை பெற ரசிகர்கள் முண்டியடித்துச் சென்ற காட்சிகள் வைரலாகி உள்ளது.