இந்தியா யாருக்கும் அடிபணியாது என்று வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரி விதிப்பு பற்றிப் பேசிய அவர், சர்வதேச நாடுகள் புதிய வர்த்தக கூட்டாளிகளைத் தேடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்தியா அதிவேகமாக ஏற்றுமதி செய்யும் என்று கூறிய பியூஸ் கோயல், புதிய வர்த்தக ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சிலி, பெரு, நியூசிலாந்து உள்ளிட்ட பலதரப்பட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர்வதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவை இறந்த பொருளாதாரம் என டிரம்ப் கூறியதை மேற்கோள்காட்டி காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி பேசுவது அவமானகரமானது என்றும் பியூஸ் கோயல் கண்டித்தார். இந்தியாவுக்குப் பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.