டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததாக, திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி வஉசி துறைமுக போக்குவரத்து மையம் உட்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்துவதில் அளித்த ஆதரவிற்குப் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததாகவும் கனிமொழி கூறியுள்ளார்.