அகண்டா 2 படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் பாலையா நிறைவு செய்துள்ளார்.
அண்மையில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருது பாலையாவின் பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கப்பட்டது.
போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்த அகண்டா என்ற படம் 2021ல் வெளியாகி அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இருந்தது. இதைத் தொடர்ந்து 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகி முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.
இப்படம் வரும் செப்டம்பர் 25-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளைப் பாலையா முடித்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.