உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவ்வழியே சென்ற இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார்.
அம்ரோஹா பகுதியில் பட்வால் என்ற இடத்தில் பழமையான கட்டடத்தின் சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சுற்று சுவர் இடிந்து விழுந்தபோது அவ்வழியே சென்ற இளைஞர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். எனினும் இளைஞர் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.