திருவள்ளூர் மாவட்டம், மெதூரில் புகையை வெளியேற்றும் தனியார் நிறுவனத்தை மூடக் கோரி பெட்ரோல் கேனுடன் வருகை தந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
மெதூர் கிராமத்தில் தார் மற்றும் சிமெண்ட் மிக்சிங் செய்யும் தனியார் நிறுவனமொன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேறும் புகையில் கலந்துள்ள ரசாயன துகள்கள் பரவி அருகே உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி வினோத் என்பவர் புகாரளித்திருந்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாசுக்கட்டுப்பாட்டுதுறையினர், புகையில் உள்ள நச்சின் அளவை பரிசோதித்தனர்.
அப்போது அங்கு வந்த விவசாயி வினோத், நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை பொன்னேரி போலீசார் பறிமுதல் செய்தனர்.