தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் மற்றும் கிளீனர் உயிர் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
நெல்லையிலிருந்து ராஜஸ்தான் நோக்கி சோலார் பேனல் அலுமினியங்களை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
கோவில்பட்டி அடுத்த சிவனைந்தபுரம் சோதனைச்சாவடி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.