புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், கடற்பாசி வளர்ப்பு மற்றும் கூண்டு முறை மீன் வளர்ப்பு திட்டத்தைப் புதுச்சேரி மீன்வளத்துறை செயலாளர் ஆய்வு செய்தார்.
பட்டினச்சேரி மற்றும் கருக்காளாச்சேரி ஆகிய பகுதிகளில் கூண்டு முறை மீன் வளர்ப்பு மற்றும் கடல்பாசி சாகுபடி படல்களைக் கடலில் நிறுவி மீனவ மகளிருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இரு மீனவ கிராமங்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக இத்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதனைப் புதுச்சேரி மீன்வளத்துறை செயலாளர் மணிகண்டன் தொடங்கி வைத்து, கடல் பாசி வளர்ப்பில் ஈடுபடும் மீனவ பெண்களுடன் கலந்துரையாடினார்.