திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மாந்துறையை சேர்ந்த நண்பர்களான கார்த்திக், சாதிக், அப்துல்லா, ஆசிக் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் தொல்குடியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக காரில் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது நகர் சாலை பகுதி அருகே வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவர்களின் கார்மீது பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த விஸ்வநாதன் மற்றும் காரில் பயணித்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.