திருச்சியில் கஞ்சா போதையில் இளைஞரைத் தாக்கிய 2 சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகரம் இ.பி.ரோடு அருகே உள்ள கல்மந்தை காலணியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அச்சகத்தில் பணியாற்றி வருகிறார்.
பணி முடிந்து வீடு திரும்பிய அவரை வழிமறித்த கஞ்சா போதையில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர், தகராறில் ஈடுபட்டு சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.
இதில் காயமடைந்த பிரகாஷ், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலீசார், 2 சிறுவர்கள் உட்பட 3 பேரைக் கைது செய்தனர்.