அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் காரில் பூம்புகாருக்குப் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பின்னர் அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்க ராமதாஸ் மறுத்துவிட்டார்.