பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக ராகுல்காந்தி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதுகுறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், ராகுல்காந்தி தனது குற்றச்சாட்டுகள் குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியிருந்தது.
ஆனால் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மறுத்த நிலையில் ராகுலுக்கு பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
இதனிடையே டெல்லியில் பேட்டியளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால் ராகுல்காந்தி தார்மிக அடிப்படையில் எம்பி பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, தெலங்கானா, இமாச்சல் முதலமைச்சர்களும் பதவி விலக வேண்டும் எனக் கூறியுள்ளார். வாக்கு திருட்டு என கூறுவது உண்மையற்றது எனத் தெரிவித்த கவுரவ் பாட்டியா, இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் ராகுல் காந்தி அழிக்க விரும்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்….