தேமுதிக வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான பாப்பாரப்பட்டி, பென்னாகரம், மூங்கில்மடுவு, ஊட்டமலை, உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் விஜய் பிரபாகரன் ஆகியோர், உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது, மழை பெய்ததால், மழையில் நனைந்தவாறு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணியை பற்றி கவலைப்பட தேவையில்லை, என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும். உரிய நேரத்தில், உரிய முடிவை அறிவிப்போம் என தெரிவித்தார்.
மேலும் தற்போது கட்சிக்கு புது ரத்தம் பாச்சப் பட்டு உள்ளது. இளைஞர்களும், பெண்களும் அதிகம் தேமுதிகவை நாடி வருகின்றனர். வளர்ச்சிப் பாதையில் தேமுதிக சென்று கொண்டுள்ளது. செல்லும் இடமெல்லாம் பொதுமக்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது.
மக்களை நேரில் சந்திப்பதில் எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது என பேசினார். தொடர்ந்து சாரல் மழை பெய்த வண்ணமே இருந்தது, ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் மழையில் நடந்தபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.