இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு பயன்பாட்டிற்கான ராணுவ தளவாடங்களை பெருமளவில் இந்தியாவே தயாரித்து வருகிறது. மேலும், தளவாடங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், 2024 – 25ம் ஆண்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, பாதுகாப்பு துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆண்டு இந்த உற்பத்தி மதிப்பு ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாயாகவும், 2019-20ம் ஆண்டில் 79 ஆயிரத்து 71 கோடி ரூபாயாகவும் மட்டுமே இருந்தது.
ஆனால், ராணுவ தளவாட உற்பத்தி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதமும், 2019 உடன் ஒப்பிடுகையில் 50 சதவீதமும் தற்போதுஅதிகரித்துள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புது மைல்கல்லாக கருதப்படுகிறது.