இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகத்தை ஒருநாளைக்கு 100 கிலோ மீட்டராக உயர்த்துவதே நோக்கம் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், நடப்பாண்டில் இதுவரை சாலை அமைச்சகம் 2 லட்சத்து 50 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களை வழங்கியுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது, இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகம் ஒரு நாளைக்கு 38 கிலோ மீட்டராக உள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அதன் வேகத்தை ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டராக விரைவுபடுத்துவதே மத்திய அரசின் இலக்கு என நிதின் கட்கரி தெரிவித்தார்.