பெங்களூருவில் வந்தே பாரத் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
கர்நாடகாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி இன்று பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து நேராக பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு வரும் அவர், பெங்களூரு – பெலகாவி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து, சாலை மார்க்கமாக மஞ்சள் நிறப்பாதையில் உள்ள ராகிகுட்டா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு, ஜே.பி.நகர் 4-வது பிளாக்கில் இருந்து கடபுகெரே வரையிலான 3-வது கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி, பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.