சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில், பாஜக நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்று வருகிறது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பயிலரங்கிற்கு, பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோரும் வருகை தந்தனர். அப்போது இருவருக்கும் ராக்கி கட்டி பெண்கள் வரவேற்றனர்.
மேலும், இந்த பயிற்சி அரங்கத்தில் பாஜக மூத்த தலைவர்கள் H ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.