கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கி உள்ளது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 2 ஆயிரத்து 854 அரசியல் கட்சிகளில், 334 அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட 6 ஆண்டுகளில் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.
இதனால், அந்த 334 அரசியல் கட்சிகளையும், தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தமிழகத்திலிருந்து இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி உட்பட 22 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.