மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாஜக பிரமுகரின் காருக்கு தீவைத்த மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம், பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கடந்த மாதம் 13-ம் தேதி, தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துவிட்டு தர்மலிங்கம் உறங்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து கார் பற்றி எரிவதை கண்ட பணியாளர்கள், போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து தர்மலிங்கம் புகாரளித்த நிலையில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, காருக்கு தீவைக்கும் நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.