ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மற்றும் குல்காம் மாவட்டங்களில் ராணுவத்தினர் மூலம் ‘ஆப்ரேஷன் அகால்’ நடவடிக்கை தொடர்ந்து 10-வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிஸ்த்வார் மற்றும் குல்காமில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களை பிடிக்க ‘ஆப்ரேஷன் அகால்’ நடவடிக்கை தொடங்கப்பட்டது.
தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்த நிலையில், தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. தொடர்ந்து 10-வது நாளாக இருதரப்பிலும் துப்பாக்கி சண்டை நடந்து வரும் நிலையில், இதுவரை ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.