ஒசூர் அருகே தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கர்நாடக அமைச்சர் சென்ற லிஃப்ட் திடீரெனப் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் சாலையில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கர்நாடகா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி மற்றும் ஒசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மருத்துவமனையில் தரைத்தளத்திலிருந்து மேல்தளத்திற்கு சென்ற லிஃப்ட் பாதியில் பழிதாகி நின்றது. இதனால் கர்நாடக அமைச்சர், எம்எல்ஏ பிரகாஷ் உட்பட பலர் லிஃப்டுக்குள் சிக்கித் தவித்தனர்.
இதையடுத்து லிஃப்ட் ஆப்ரேட்டர் உதவியுடன் 10 நிமிட போராட்டத்திற்கு பிறகு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.