விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே வீட்டில் பட்டாசு வெடித்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
விஜய கரிசல்குளத்தில் பொன்னுபாண்டி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெற்றுள்ளது.
அப்போது வெடி விபத்து ஏற்பட்டத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து வெம்பக்கோட்டை, விஜய கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்புகுறித்து சோதனை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன் பேரில் 10 குழுக்களாகப் பிரிந்து போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.