விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் திரளானோர் அருவியில் குவிந்தனர்.
பராமரிப்பு பணி காரணமாகப் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குளித்து பொழுதைக் கழித்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த கவியருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள அகஸ்தியர் அருவிக்குச் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் அகஸ்தியர் அருவிக்குச் செல்லும் மலைச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.