உலகின் அழகற்ற நாய் என்ற விருதை வென்ற பெடுனியாவுக்கு இந்திய மதிப்பில் 4 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், `Sonoma-Marin Fair’ என்ற பெயரில் அழகற்ற நாய்களுக்கான போட்டி, கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதில் ரோமங்களற்ற பெடுனியா என்ற தத்தெடுக்கப்பட்ட நாய் முதல் பரிசை வென்றது. அதனைச் செல்லமாக வளர்த்த உரிமையாளர் ஷன்னோன் நைமனுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அழகான நாய்களை யார் வேண்டுமானாலும் வேண்டி விரும்பி வளர்ப்பு நாயாகத் தத்தெடுத்து வளர்ப்பார்கள். ஆனால், அழகற்ற நாய்களுக்கும் இந்த உலகம் சொந்தமானது என்பதோடு இங்குள்ள மனிதர்களும் சொந்தமானவர்களே என்பதை உணர்த்தவே இவ்விழா ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் மூலமாக நாய்களின் மீது அக்கறை கொண்டு கைவிடப்பட்ட நாய்களை வளர்க்கும் ஆர்வலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது.