அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள கடையிலிருந்து 7 ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள லாபுபு பொம்மைகள் திருடப்பட்டன.
லாப்புவென்டே பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த விலையுயர்ந்த லாபுபு பொம்மைகளைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தப்பியோடிய மர்ம நபர்கள் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.