சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் மீண்டும் இந்துக்கள் மீது முஸ்லீம்கள் வன்முறை தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தனர். தேசப் பிரிவினையின் கொடூரங்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1765ம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி தான், வரலாற்று சிறப்பு மிக்க அலகாபாத் ஒப்பந்தம் ஏற்பட்டது. 1600 ஆண்டு முதல் பாரதத்தில் வணிகம் செய்து வந்த கிழக்கிந்திய கம்பெனி, நாடெங்கும் பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இருந்தது. 1875-ல் சிப்பாய் கலகம் தொடங்கி வெள்ளையனே வெளியேறு வரை பல சுதந்திர போராட்டங்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக நடைபெற்றுள்ளன.
கல்கத்தாவில் சில முஸ்லீம்கள் இந்திய சுதந்திர நாளைத் துக்ககநாளாகக் கொண்டாடப் போவதாக அறிவித்திருந்தனர். வன்முறைகளை முன்னின்று நடத்திய அடிப்படைவாத முஸ்லீம் ஷஹித் சுராவர்தி, சோடேபூர் ஆசிரமத்துக்குக் காந்தியைக் காண வந்திருந்தான்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதிவரை, கல்கத்தாவிலேயே தங்க வேண்டும் என்று ஷஹித் சுராவர்தி கேட்டுக் கொண்டதாகக் கூறிய காந்தி, இஸ்லாமிய வன்முறையால் பாதிக்கப் பட்ட இடங்களுக்குத் தான் செல்லும்போது வரும் உடன்வர வேண்டும் என்று கூறினார்.
மேலும், பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் அந்நாட்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் காந்தி வலியுறுத்தினார். இதற்கிடையே, காந்தியின் பிரத்யேக மருத்துவராக இருந்த டாக்டர் ஜீவராஜ் மேத்தா இந்திய மருத்துவத் துறையின் பொது இயக்குனராக நியமிக்கப் பட்டார். லாகூரை இந்தியாவுடன் சேர்க்க ராட்கிளிப்முடிவெடுத்துள்ளதாகப் பரவிய வதந்தியைத் தொடர்ந்து, லாகூரில் முஸ்லீம் நேஷனல் கார்ட் அமைப்பு மிகப் பெரிய வன்முறைகளில் ஈடுபட்டது.
அந்த அமைப்பின் தொண்டர்கள், அரசு காவல் சீருடையில் வந்து, கண்ணில் தென்படுகிற இந்துக்களையும் சீக்கியர்களையும் வெட்டிக் கொன்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இந்துக்களும் சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். லாகூரின் தெருக்கள் எல்லாம் போர்க்களம்போலக் காட்சியளித்தன.
லாகூரில் பற்றவைக்க பட்ட நெருப்பு, குருதாஸ்பூர் முதல் லியால்பூர் வரை வேகமாகப் பரவியது. லாகூரில் இருந்த ஸ்வயம் சேவகர்கள், தங்கள் உயிரையும் துச்சமென மதித்து, பல இந்துக்களையும் சீக்கியர்களையும் காப்பாற்றினார்கள். கல்கத்தாவை பாகிஸ்தானுடன் சேர்க்காவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாகத் துறைமுக ஊழியர்கள் அறிவித்தனர்.
விமானப்படையில் இரண்டு பாகிஸ்தானுக்கும் எட்டு இந்தியாவுக்கும் இராணுவம் மற்றும் கடற்படையில் இரண்டு இந்தியாவுக்கும் ஒன்று பாகிஸ்தானுக்கும் பிரித்துக் கொடுக்க மவுண்ட்பேட்டன் முடிவு செய்தார். 1948 ஏப்ரல் மாதம் வரை, பீஃல்ட் மார்ஷல் சர் கிளாட் ஆஹின் லெக் இருநாட்டு படைகளுக்கும் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இன்னும் மூன்று நாட்களில் பிரிக்கப்பட்ட பாரதம் சுதந்திரம் அடைகிறது. ஏற்கெனவே எல்லைகளில் வன்முறை கொழுந்து விட்டு எரிகிறது. இந்துக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.
பிரிவினையை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ், இந்துக்கள் கொல்லப்படுவது பற்றிஎந்தக் கவலையும் வெட்கமும் இல்லாமல் சுதந்திர தின கொண்டாட்டத்துக்குத் திட்டமிட்டு கொண்டிருந்தனர்.