திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அரசுப் பேருந்தைச் சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிப்பட்டு ஊராட்சியில் கழிவுநீர் வெளியேற முறையான வசதி செய்யப்படாததால், கால்வாய்களில் தேங்கி துர்நாற்றம் விசி வந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கனமழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அவ்வழியே சென்ற அரசுப் பேருந்தைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.