நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி பேனர் வைத்து மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட தட்டாம்பாறை, கோட்டப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 80-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் தங்களுக்கு செய்துதரவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.