வெற்றிபெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி வருவதாகப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இதுதொடர்பாகச் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
திருமாவளவன் முன்னாள் முதல்வர் குறித்து தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் வைரமுத்து ராமர் குறித்தும் அவதூறு பேசி வருகிறார் ராமர் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தவர், இதனால் வைரமுத்துவுக்கு வெறுப்பாக இருக்கலாம். தமிழுக்கு அகராதி வைரமுத்து இல்லை, எல்லாரும் வணங்கும் ராமனை எப்படி பேசுவார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், 1000கோடி ஊழல் கழிப்பறையில் நடந்துள்ளது, அதற்கு மாநில அரசு பதிலளிக்கவில்லை என்றும் இந்தியா பொருளாதரத்தில் மேலோங்கி உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டடார்.
தூத்துக்குடியின் கார் தொழிற்சாலை வருகிறது என்றால் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளது. அதனால் முதலீடு வருகிறது. இந்தியா என்று உலகில் நான்காவது பொருளாதர நாடாக வளர்ந்துள்ளது என்றும் அதை நான்கிலிருந்து மூன்றாக மாற்ற மோடி வேலை செய்து வருகிறார். வெற்றிப்பெற முடியாத ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டி வருகிறார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
தேர்தல் ஆணையம் என்பது தனிப்பட்ட அமைப்பு, ஏன் மத்திய அரசு இதில் தலையீட வேண்டும் என்றும் எல்லா பொய்களுக்கும் உறுதுணையாகத் திமுக இருக்கும், இது ஆரம்பத்திலிருந்தே ஒன்று பாஜக ஆதரவாக இருந்தவர்களின் வாக்குகள் காணவில்லை 20,000 ஓட்டுகள் தி நகரில் காணவில்லை, கோயம்புத்தூரில் 1 லட்சம் காணவில்லையென அண்ணாமலை குற்றஞ்சாட்டி இருந்தார், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஜெயித்தால் சரியாக இருக்கும், ஆனால் பாஜக வெற்றி பெற்றால் வோட்டிங்மிஷின் சரியில்லை எனக் கூறுவார்கள்.
தேர்தல் கமிஷனை அந்தக் காலத்திலிருந்தே குறை சொல்லித் தான் வருகிறார்கள் ராகுல் காந்தியால் சிக்ஸர் அடிக்கமுடியவில்லை, அதான் பந்தைத் தூக்கி வீசிக்கொண்டே இருக்கிறார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.