எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பேரணிக்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, தர்மேந்திர பிரதான் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிகார் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாகச் சென்றனர்.
இதுகுறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற நேரத்தைத் தினமும் வீணடிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் மீது இண்டி கூட்டணிக்கு நம்பிக்கை இல்லையெனக் கூறியுள்ள அவர், எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி முக்கிய மசோதாக்களை அரசு நிறைவேற்றும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.
இதற்கிடையே பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்கும் முயற்சியாக இந்தப் பேரணியை எதிர்க்கட்சியினர் கையில் எடுத்துள்ளதாக விமர்சித்தார்.
தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லாததால், தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதாகவும் கூறியுள்ளார். பொய்களைக் கூறுவதற்கு பதிலாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? எனவும் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.