புதிய வருமான வரி மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து மசோதா தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஸ்ரீ பைஜயந்த் பாண்டா தலைமையிலான 31 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு, 4,500 பக்கங்கள் கொண்ட புதிய வருமான வரி மசோதா 2025-ன் மீது 285 பரிந்துரைகளை வழங்கியது.
இந்நிலையில், அனைத்து பரிந்துரைகளை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மேற்கொண்ட அமளிக்கு மத்தியில் விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.