சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் ஆடு, கோழியை பலியிடுவதற்கு அனுமதி உண்டா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கை நேற்று விசாரித்தார்.
அப்போது, சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளதா? ஆடு, கோழி பலியிடுவதற்கும், கந்தூரி நடத்துவதற்கும் அனுமதி உண்டா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி,நெல்லிதோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி இருக்கிறதா? எனவும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் வினா எழுப்பினார்.