திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.
கொடைக்கானலின் எம்எம்தெரு பகுதியில் உள்ள கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் பனிமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது.