கோவை மாவட்டம், ரத்தினபுரி பகுதியில் மதுபோதையில் வடமாநில இளைஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ரத்தினபுரி செக்கான் தோட்டம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ள வடமாநில இளைஞர்கள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.
வாய் தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இது குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். இந்நிலையில், வடமாநில இளைஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலானது.